தாயனூர், அவலூர்பேட்டை பகுதியில் பள்ளியில் இடை நின்ற மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.
மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்க்கும் பணி நடந்தது.
பி.ஆர்.சி., மேற்பார்வையாளர் பழனி, கூடுதல் ஏ.இ.ஓ., ஸ்ரீராமுலு
முன்னிலையில் தாயனூர் இருளர் காலனியில் பள்ளியிலிருந்து நின்று விட்ட
மாணவர்களை பெற்றோர்களிடம் பேசி மீண்டும் மாணவர்களை சேர்க்கும் பணி நடந்தது.
தலைமை ஆசிரியர் விஜயா,ஆசிரியர் பயிற்றுநர்கள் இமானுவேல், செல்வம்,
முருகன், பாரதி, சிவா, ராஜசேகரி மற்றும் கற்கும் பாரதம் யுவராஜ் கலந்து
கொண்டனர். அவலூர்பேட்டையிலும் மாணவர்கள் சேர்க்கும் பணி நடந்தது.
No comments:
Post a Comment