சிதம்பரம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள்
இயக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஆவணங்கள் இன்றி
இயக்கப்படுகிறது. பள்ளி சவாரி ஓட்டும் ஆட்டோக்களில் மாணவர்கள் அதிக அளவில்
அழைத்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நகரில் விதிகள் மீறி இயக்கப்படும்
ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.எஸ்.பி., ராஜாராம்
உத்தரவிட்டார்.
கடந்த 4ம் தேதி பள்ளிகளுக்கு அதிக அளவில் குழந்தைகளை
ஏற்றிச் சென்ற 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை மடக்கிப்பிடித்தனர். அப்போது
டி.எஸ்.பி., ராஜாராம், ஆட்டோ டிரைவர்களிடம், ஆட்டோக்களில் பள்ளி மாணவர்களை 5
பேருக்கு மேல் ஏற்றக் கூடாது. ஆவணங்ளை இல்லாத ஆட்டோக்களை இயக்கக் கூடாது.
விதிகளை மீறி இயக்கினால் ஆட்டோ பறிமுதல் செய்து டிரைவர்கள் மீது
வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்.
டி.எஸ்.பி., எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, ஆட்டோ
டிரைவர்கள் தங்கள் இஷ்டம் போல் ஆட்டோக்களை இயக்கி வந்தனர். இந்நிலையில்
நேற்றுமுன்தினம் காலை ஆட்டோக்களில் அதிக அளவு மாணவர்களை அழைத்து சென்ற
ஆட்டோக்களையும், ஆவணங்கள் இல்லாத 15 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment