மதுரையில் தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள் கூடுதல் விலைக்கு
விற்கப்படுவதாக எழுந்த புகாரின்படி, கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரில் புது மண்டபத்தில்
ஏராளமான புத்தகக் கடைகள் உள்ளன. இங்கு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து
வகுப்புகளுக்குரிய புத்தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு
பாடநூல் நிறுவனத்திடம் பெற்று அவை விற்பனை செய்தாலும், கூடுதல் விலைக்கு
விற்பதாக புகார்கள் எழுந்தன.
தொழிலாளர் நல அதிகாரிகள் நேற்று கடைகளில் திடீர் சோதனை
நடத்தினர். இலவச புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்ற நோக்கில் சோதனை
நடந்தது. உதவி கமிஷனர் சுப்ரமணியன் தலைமையில், ஆய்வாளர்கள் சரோஜினி,
காயத்ரி, சந்திரசேகரன், புஷ்பராஜ் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் சோதனை
செய்தனர். கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்றது தெரிந்தது.
ரூ.85 விலை குறிப்பிடப்பட்ட புத்தகங்கள், கொள்முதல் செலவு
மற்றும் பைண்டிங் செலவு எனக்கூறி ரூ.130 வரை விற்கப்பட்டது. ரப்பர்
ஸ்டாம்ப் மூலம் இந்த விலையை அச்சிட்டு இருந்தனர். 5 கடைகளில் இப்படி
கூடுதல் விலைக்கு விற்றது கண்டறியப்பட்டது. இக்கடைகளுக்கு தலா ரூ. 2500
அபராதம் விதிக்கப்பட்டது.
"முதன்முறை எனில் அபராதம், தொடர்ந்து முறைகேடு நடந்தால் கோர்ட் நடவடிக்கை தொடரும்" என, அதிகாரிகள் எச்செரித்துள்ளனர்.
No comments:
Post a Comment