தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் மதுரை மனையியல் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காண்டு பி.எஸ்சி., மனையியல் படிப்பு
வழங்கப்படுகிறது.
பி.எஸ்சி., பாடத்தில்
உணவியல் மற்றும் சத்தியல் துறை, குடும்ப வள மேலாண்மை துறை, மனிதவள
மேம்பாட்டு துறை, ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்கார தொழில்நுட்பத் துறை,
மனையியல் விரிவாக்கத் துறைகளின் கீழ் பாடம் நடத்தப்படுகிறது. பி.எஸ்சி.,
விவசாய படிப்புக்கு இணையான, தொழிற்கல்வி அந்தஸ்து பெற்ற படிப்பு இது.
பல்கலை பாடம் குறித்து, கல்லூரி டீன் பானுமதி கூறியதாவது:
"இளநிலை மட்டுமின்றி, எம்.எஸ்சி.,யில் ஐந்து படிப்புகள் உள்ளன. உணவியல்
மற்றும் சத்தியல் துறையில் பி.எச்டி., படிப்பும் உள்ளது.
அரசு, பள்ளிகளில் ஆசிரியராக, மாநில, மத்திய நிறுவனங்களில்
விஞ்ஞானிகளாக, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ரயில்வே துறையில் உணவு
நிபுணராக, ராணுவ உணவு ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாக, உணவியல் ஆலோசகராக,
வேளாண் அறிவியல் மைய பாடத்திட்ட வல்லுனராக பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
தனியார் துறைகளிலும் இதே பதவிகளைப் பெறலாம். சுயமாக தொழில்
துவங்க விரும்பினால், உணவு பதனிடும் தொழிற்சாலை, மதிப்பூட்டப்பட்ட பழம்,
உணவு, காய்கறி தயாரிக்கும் தொழிற்சாலை, பேக்கரி, உணவு மற்றும் உடல்நல
ஆலோசனை மையம் அமைக்கலாம்.
வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமான இக்கல்லூரியில், மற்ற
தொழிற்பிரிவுகளைப் போல, "கவுன்சிலிங்" மூலம் மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர்," என்றார்.
தகவல்களுக்கு: 0452 - 646 6402.
இணையதளம்: http://agritech.tnau.ac.in/ta/about_us/abt_us_colleges_hscrimdu_ta.html
இணையதளம்: http://agritech.tnau.ac.in/ta/about_us/abt_us_colleges_hscrimdu_ta.html
No comments:
Post a Comment