பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவ, மாணவியர், முதல்வர் தகுதி பரிசுக்காக விண்ணப்பிக்க,
நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களில், முதல், 1,000
பேருக்கு, ஆண்டுதோறும், "முதல்வர் தகுதி பரிசு" வழக்கப்படும்.
மேல்படிப்பை தொடர்வதற்காக, மாதந்தோறும், 3,000 வீதம், ஐந்து
ஆண்டுகளுக்கு, இப்பரிசு வழங்கப்படும். இத்திட்டத்துக்காக, இந்நிதியாண்டில்,
10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த, 2012ல் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,069 மதிப்பெண் பெற்ற
மாணவர்கள், 1,082 மதிப்பெண் பெற்ற மாணவியர்; 2013 பொதுத் தேர்வில், 1,074
மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 1,085 மதிப்பெண் பெற்ற மாணவியரும், சிறப்பு
பரிசுக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது, மேல்படிப்பு பயில்பவர்கள், தாங்கள் பயிலும், கல்வி
நிறுவனத்திலிருந்து, படித்ததற்கான சான்றுகளுடன், அந்தந்த மாவட்ட நல
அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களில் இருந்தும்
பெறப்பட்ட விண்ணப்பங்களில், வரையறுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில்,
முதல், 1,000 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும்.
No comments:
Post a Comment