பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் இறப்பு, நெய்வேலியில்
குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கத்தையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,
அங்கன்வாடி சத்துணவு மையங்களை, உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஆய்வு செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது; ஆய்வுப் பணி இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து உணவு
பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள
சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சமையல் அறைகள் சுத்தமாக உள்ளதா, சமையலுக்கு பயன்படும் எண்ணெய், உணவுப்
பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா, சுத்தமான தண்ணீரில் சமையல்
செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வர்.
சுகாதாரமாக இல்லாவிட்டால், அதுகுறித்து ஊழியர்களுக்கு அறிவுரை
வழங்கப்படும். உணவின் தரம் மோசமாக இருக்கும் பட்சத்தில், உணவின் மாதிரிகளை
எடுத்து பரிசோதிக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள், உடனடியாக
தொடங்கும்.
சென்னையில், அனைத்து பகுதிகளிலும் இன்று ஆய்வு தொடங்குகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment