பட்டதாரி இளைஞர்கள், சுயதொழில் துவங்குவதற்கு வழங்க வேண்டிய கடனுதவியை,
உடனடியாக வழங்க கோரி, மத்திய அரசுடன், தமிழக அரசு அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்
பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ்
செயல்படுகிறது. இந்த அமைப்பு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும்
வளர்ச்சிக் கழகத்திடமிருந்து, நிதியுதவி பெற்று, பயனாளிகளுக்கு குறைந்த
வட்டியில், கடன் வழங்குகிறது.
இவற்றில், "பட்டதாரி இளைஞர்கள், தொழில் துவங்க, அதிகபட்சமாக, 10 லட்சம்
ரூபாய், கடனுதவி வழங்கப்படும்" என இரண்டு ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,
அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை இத்திட்டம் அமலுக்கு வரவில்லை.
அதுமட்டுமின்றி, "95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்குள், தொழில்
துவங்குவதற்கான விண்ணப்பங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்" என
அறிவுறுத்தப்படுகிறது. தற்போதுள்ள, விலைவாசி ஏற்றத்தில், 95 ஆயிரம்
ரூபாயில், இளைஞர்கள் புதிய தொழில் துவங்குவது சாத்தியமில்லை.
எனவே, அறிவிக்கப்பட்ட திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என, பிற்படுத் தப்
பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய அரசு, காங்கிரஸ் அல்லாத பிற மாநிலங்களுக்கு, நலத்திட்டங்களுக்கான
நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. பொருளாதார மேம்பாட்டு கழகம்
மூலம் வழங்கப்படும், அனைத்து பொருளாதார கடனுதவிகளையும், மத்திய அரசே
வழங்குகிறது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அறிவிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள்
தொழில் துவங்க, அளிக்க வேண்டிய கடனுதவியை, இன்று வரை அமல்படுத்தவில்லை.
இதனால், விண்ணப்பங்கள் அனைத்தும் திரும்பி வருகின்றன. எனவே, இப்பிரச்னையில்
நிரந்தர தீர்வு காண, மத்திய பிற்படுத்தப்பட்ட துறை அதிகாரிகளை அணுக,
முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment