தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி
இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை டைப்ரைட்டிங், சுருக்கெழுத்து
தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வு 18ம் தேதி
ஆரம்பமாகிறது.
அன்று சுருக்கெழுத்து தமிழ், ஆங்கிலம் ஜூனியர், இன்டர்மீடியட், சீனியர்
பிரிவுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு காலை 10 மணி முதல் மாலை
4.15 மணி வரை நடக்கிறது. 19ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை
அக்கவுன்டன்சி முதல் மற்றும் 2ம் தாள் தேர்வு நடக்கிறது.
இதே போல், வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த
டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு தேர்வுகள் தள்ளி
வைக்கப்பட்டது. இத்தேர்வுகள் வரும் 31ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை
4.05 மணி வரை ஒன்று முதல் நான்கு பேட்ஜ் வரையிலான தேர்வு நடக்கிறது.
வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஜூனியர்
பிரிவு 5ம் பேட்ஜ் மாணவர்களுக்கும், சீனியர் பிரிவில் 1 முதல் மூன்று
பேட்ஜ் மாணவர்களுக்கும் தேர்வு நடக்கிறது. அன்று காலை டைப்ரைட்டிங் தமிழ்,
ஆங்கிலம் ஹைஸ்பீடு தேர்வுகள், மாலையில் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர்
தேர்வுகளும் நடக்கிறது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4
தேர்வு நடக்கிறது. இத்தேர்வை முன்னிட்டு 24ம் தேதி நடத்தப்படுவதாக
அறிவிக்கப்பட்ட டைப்ரைட்டிங் தேர்வுகள் 31ம் தேதியும், 25ம் தேதி
நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் மாதம் 1ம் தேதியும் நடத்த
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் ஒரே நாளில் இரண்டு தேர்வுகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில்
இருந்த தேர்வர்கள் இரண்டு தேர்வுகளையும் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளதால்
மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழ்நாடு
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திற்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment