தமிழகத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும்
நிலையில், வெறும், 119 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை
குழந்தைகளுக்கு, இடம் வழங்கியுள்ளன. மற்ற பள்ளிகள் குறித்து, எவ்வித
தகவலும் தெரியவில்லை.
சிறுபான்மை பள்ளிகள் தவிர, மற்ற
அனைத்து வகை பள்ளிகளும், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் வருகின்றன. அதன்படி,
மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சில ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் ஆகியவை, சட்டத்தின் கீழ் வருகின்றன.
மாநிலத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி
வருகின்றன. இவற்றில், 123 பள்ளிகள் குறித்த விவரங்கள் மட்டுமே, கல்வித்
துறைக்கு கிடைத்துள்ளன. இதில், நான்கு பள்ளிகள், 25 சதவீத இடங்களை வழங்க
மறுத்துள்ளன.
மீதமுள்ள, 119 பள்ளிகள் மட்டும், 1,025 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளன.
300க்கும் அதிகமான பள்ளிகள், கல்வித் துறை கண்களில் இருந்து, தப்பித்தது
எப்படி என்பது, புரியாத விந்தையாக உள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் குடுமி, எங்களிடம் இல்லை. கல்விக் கட்டணம் நிர்ணயம் மற்றும்
ஆர்.டி.இ., சட்டம் போன்றவற்றில் மட்டும், தமிழக அரசு தலையிட முடியும்.
மற்றபடி, பெரிய அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்தவோ, விதிகளை
மீறும்போது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரமோ, எங்களிடம் இல்லை" என
தெரிவித்தார்.
ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்தாத மற்றும் இடங்களை ஒதுக்க முன்வராத
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மீது, சென்னை மண்டல அதிகாரி, கடும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, கல்வித்துறை வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.
No comments:
Post a Comment