"சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், விரைவில், கடல்சார்
சட்டப் பட்டய படிப்பு துவங்கப்படும்" என அப்பல்கலைக்கழக துணைவேந்தர்
விஜயகுமார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம்
கூறியதாவது: சட்ட பல்கலைக்கழகத்தின், ஏழாவது பட்டமளிப்பு விழா, வரும், 25ம்
தேதி நடக்கிறது. இதில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு
விருந்தினராக பங்கேற்கிறார். இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு படிப்பை
முடித்த, 520 பேருக்கு விழாவில் பட்டம் அளிக்கப்படும்.
ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்ட படிப்பிற்கான கலந்தாய்வு, வரும், 15ம்
தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. மொத்தமுள்ள, 1,052 இடங்களுக்கு,
ஒரு இடத்திற்கு, நான்கு பேர் என்ற அடிப்படையில், 4,163 மாணவருக்கு, அழைப்பு
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் கிடைக்காத மாணவர், நேரடியாக
கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். சட்ட கல்லூரி மாணவர்களுக்கான வகுப்பு,
ஆகஸ்ட், 1ம் தேதி துவங்கும்.
சட்ட பல்கலைக்கழகம், பல்வேறு பட்டய படிப்புகளை தொலைதூர கல்வி நிறுவனம்
மூலம் வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டு முதல், கடல்சார் சட்ட பட்டய
படிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, கடலோர காவல்படை
அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இளங்கலை பட்டம் முடித்தவர், கடல்சார் பட்டய படிப்பில் சேரலாம். இதற்கான
சிறப்பு வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அல்லது மாலை
நேரங்களிலும் நடத்தப்படும். பல்கலையின் கல்விக்குழு ஒப்புதல் கிடைத்ததும்,
பட்டய படிப்பு துவங்கப்படும். இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
No comments:
Post a Comment