பி.ஆர்க்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஜுலை 7ம் தேதி நடைபெற்று
முடிந்தது. அதன்படி தற்போது, அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, மொத்தம் 571
இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையில் எஸ்.டி., பிரிவில் 1 இடமும், அரசு மற்றும் உதவிபெறும்
கல்லூரிகளில் எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., பிரிவில் 1 இடமும், ஆக 2
இடங்களும் உள்ளன.
சுயநிதி கல்லூரிகளில், ஓ.சி., பிரிவில் 29 இடங்களும், பி.சி.எம்.,
பிரிவில் 19 இடங்களும், பி.சி., பிரிவில் 165 இடங்களும், எஸ்.சி.ஏ.,
பிரிவில் 46 இடங்களும், எஸ்.சி., பிரிவில் 196 இடங்களும், எஸ்.டி.,
பிரிவில் 15 இடங்களும் என்று மொத்தமாக 568 இடங்கள் உள்ளன.
பி.ஆர்க்., படிப்பின் மொத்த சேர்க்கை அளவான 1,664 இடங்களில், ஒதுக்கீடு
செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 1,093. தற்போது காலியாக இருப்பவை 571.
No comments:
Post a Comment