வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை அளிக்கப்படும், என்று சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில், கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 60
வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 17 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, வரும் 2030ல் இருமடங்காக, அதாவது, 34 கோடியாக உயரும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது, வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு, தங்கள்
குடும்பம், பணி என்று இருக்கும் கலாசாரம் வெகுவாக பரவி வருகிறது. இதைத்
தடுக்கவும், முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சீன அரசு முடிவு
செய்துள்ளது.
பிள்ளைகள், பெற்றோரை தங்களுடன் வைத்து பராமரிக்க வேண்டும்;
அல்லது அடிக்கடி சென்று அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம்
கொண்டும், பெற்றோரை கண்டிக்கக்கூடாது. மீறினால், சிறைத் தண்டனை
அளிக்கப்படும். இவ்வாறு, சீன அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த தகவல்கள், அந்நாட்டு இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன. வயதான பெற்றோரை மதிப்பதாக கூறும் அந்நாட்டு மக்கள்,
அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர். மேலும், இப்பிரச்னையை சட்ட ரீதியாக
அணுகாமல், உணர்வுபூர்வமாக அணுக வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment