"பாரம்பரிய மருத்துவம் பள்ளி, கல்லூரிகளில் போதிக்கப்பட
வேண்டும்" என வேளாண் பல்கலையில் நடந்த தேசிய மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
கோவை வேளாண் பல்கலையில் யோகா மற்றும் மூலிகை மருத்துவ தேசிய
மாநாடு நிறைவு விழா நேற்று நடந்தது. மூலிகைத்துறை பேராசிரியர் விஜயகுமார்
வரவேற்றார். வேளாண் பல்கலை துணை வேந்தர் ராமசாமி பேசுகையில், "பாரம்பரிய
மருத்துவத்தின் மூல ஆதாரம் தாவரம். இது தொடர்பாக, புதுப்புது ஆராய்ச்சிகள்
வரவேண்டும். அனைவரும் கைகோர்த்து செயல்பட ஆரம்பித்தால், பாரம்பரிய
மருத்துவம் மேம்படும்," என்றார்.
யோகா துறைத்தலைவர் இளங்கோவன் பேசுகையில், "தமிழகத்திலுள்ள
பள்ளி, மருத்துவமனைகளில் யோகா முறையை நடைமுறைப்படுத்த அரசு
உத்தரவிட்டுள்ளது. உண்மையான மனிதரை உருவாக்க யோகக் கலை முக்கியம். எல்லா
மனிதர்களிடமும், யோகாவை பரிசாக அளியுங்கள்," என்றார்.
"பாரம்பரிய மருத்துவம் குறித்து, பள்ளி, கல்லூரிகளில்
பாடத்திட்டங்களை ஏற்படுத்த வேண்டும்; மாவட்டம் தோறும், யோகா கல்லூரிகளை
உருவாக்க வேண்டும்" என்பன, உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment