பாளை., சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தா, ஆயுர்வேதம்
உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்
விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் இயற்கை
மருத்துவம், யோகா ஆகிய இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கும் பணி பாளை., சித்த மருத்துவக்
கல்லூரியில் நேற்று துவங்கியது. பணியை கல்லூரி முதல்வர் சவுந்திரராஜன்
துவக்கி வைத்தார்.
விண்ணப்பிப்போர் இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும்
ஹோமியோபதித்துறை என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 500
ரூபாய்க்கு டிடி எடுத்து விண்ணப்பிக்கவேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் ஜாதி சான்றிதழ்
மற்றும் மார்க் ஷீட் ஆகியவற்றை அளித்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment