முந்தைய நாட்களில், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக
பணியாற்றிய நபர்களை ப்ராபர்டி டீலர் என்று அழைத்தனர். ஒரு சிறிய வீடு என்ற
நிலையிலிருந்து பெரிய தொழில் வளாகங்கள் வரை, மேற்கூறிய அம்சங்களை
மேம்படுத்துவதில், இன்று, நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன.
இத்தகைய முன்னேற்றங்கள்,
இத்துறைக்கான நன்கு பயிற்சிபெற்ற, இதுதொடர்பான வணிகத்தை நன்கு புரிந்துள்ள
நிபுணர்களின் தேவையை அதிகப்படுத்தியுள்ளன. இதுதொடர்பான துறைகளில், ஒரு
சிறப்பு பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றவருக்கான வேலைவாய்ப்புகள் சிறப்பாக
உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
இத்தொழில் துறை தொடர்பான பலவிதமான அம்சங்கள் குறித்த அடிப்படை அறிவைக்
கொண்டிருக்கும் ஒருவர், மற்றவரை விட, அதிக முக்கியத்துவத்தையும்,
வாய்ப்பையும் பெறுவார். இத்தகைய தேவைகளை நிறைவுசெய்யும் பொருட்டு, BBA Real
Estate and Urban Infrastructure (REUI) என்ற படிப்பு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பை பற்றி...
இப்படிப்பை, அமிட்டி பல்கலையினுடைய, கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலின்,
RICS பள்ளி வழங்குகிறது. இப்படிப்பு நொய்டா வளாகத்தில் மட்டும்
வழங்கப்படுகிறது.
இப்பாடத்திட்டத்தில், ஆர்கிடெக்சர் மற்றும் கட்டட வடிவமைப்பு, நகர்ப்புற
வடிவமைப்பு மற்றும் திட்டமிடல், மேனேஜெரியல் எகனாமிக்ஸ், ரியல் எஸ்டேட்
சட்டங்கள், விதிமுறைகள் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கட்டணம்
மூன்று வருட காலகட்டத்தைக் கொண்ட இப்படிப்பிற்கான செலவு ரூ.4.5 லட்சங்கள்.
நடைமுறை அறிவு
இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், ஹாங்காங், ஷாங்காய், டோக்கியோ,
சியோல் மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களில், 2 முதல் 4 வாரங்கள் வரை
நடைபெறும் Industry case study -களில், ஏதேனும் ஒன்றில் கலந்துகொள்ளும்
வாய்ப்பினை பெறலாம்.
களப்பணி, சீனாவிலுள்ள ரியல் எஸ்டேட் அகடமியால் நடத்தப்படும். இந்தக்
களப்பணியில், தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடும் அம்சமும்
இடம்பெறும்.
மாணவர்கள், project inception, project finance, valuation, appraisal,
urban planning policies, construction technology & services, leasing
contracts and associated legal matters போன்ற பலவிதமான property மற்றும்
construction தலைப்புகளில் அறிவைப் பெறுவார்கள்.
சேர்க்கை விபரங்கள்
அமிட்டி பல்கலைக்கழகத்தால், நுழைவுத்தேர்வு நடத்தப்படும். அதற்கடுத்து,
முந்தைய படிப்பு செயல்பாடுகள், நோக்க அறிக்கை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்கள் இறுதியாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
10 மற்றும் 12ம் வகுப்புகளில், கூட்டாக, குறைந்தபட்சம் 60%
மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எந்தப் பிரிவில் படித்திருந்தாலும்
இது பொருந்தும்.
பணி வாய்ப்புகள்
கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் துறையின் ஸ்பெஷலைஸ்டு துறைகளில்,
investments, asset management, valuation, appraisal, consulting,
construction economics, real estate and facilities management, leasing
and sales, development and construction போன்ற பல்வேறான தொழில்
வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பில் சேரும் தகுதிகள்
பள்ளிப் படிப்பை முறைப்படி முடித்து, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர் தேர்வு
தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்முகத்
தேர்வின் அடிப்படையிலும், இப்படிப்பிற்கு, மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வேலை வாய்ப்புக்கான இடங்கள்
* ரியல் எஸ்டேட்
* கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு
* கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு
No comments:
Post a Comment