மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல்
வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, முதல் கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம்,
19 - 22ம் தேதி வரை நடந்தது. அதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள,
அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.
அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் பல் மருத்துவக்
கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு பி.டி.எஸ்., இடங்கள், தனியார் மருத்துவக்
கல்லூரிகளின், அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., இடங்கள், இரண்டு அரசு
மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்ட, 185 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்.,
இடங்கள் ஆகியவற்றுக்கு, ஜூலை இரண்டாம் வாரம், கலந்தாய்வு நடத்த
திட்டமிட்டிருந்தது.
ஆனால், மாணவர் சேர்க்கை தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சிலின் இறுதி
ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இதையடுத்து, "மருத்துவப் படிப்புக்கான,
இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த
திட்டமிட்டுள்ளோம். கலந்தாய்வு குறித்த விவரங்கள், www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும்" என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment