"நடப்பு கல்வியாண்டில், கனரா வங்கி கிளைகள் சார்பில்,
மாணவர்களுக்கு கல்விக்கடனாக 60 கோடி ரூபாய் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது,"
என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கனரா வங்கி கிளைகள்
சார்பில், கல்விக்கடன் வழங்கும் முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று
நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ், முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட முன்னோடி
வங்கி மேலாளர் சந்திர சேகரன், முதுநிலை மேலாளர் வெங்கட்ராமன்,
மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக பேசினர்.
பல்லடம் ரோடு கனரா வங்கி, பி.என்.ரோடு, ஜெய்வாபாய் பள்ளி,
ஆண்டிபாளையம், அனுப்பர்பாளையம், கொங்கு நகர் என ஆறு கிளைகள் சார்பில்
கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய முகாமில்,
மாநகராட்சி பகுதியை சேர்ந்த 90 மாணவ, மாணவியர்; பிற பகுதிகளில் இருந்து 12
பேர் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தனர்.
விண்ணப்பம் செய்ததில், 95 பேருக்கு நேற்று உடனடியாக
கல்விக்கடன் பெறுவதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது. தாமதமாக
விண்ணப்பித்த ஏழு பேருக்கு, வரும் 22ம் தேதி கடிதம் வழங்கப்படுகிறது.
ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட வங்கிகளில்
கல்விச்சான்றுகளை சமர்ப்பித்து, கடனுதவி பெறலாம். ஒவ்வொரு வங்கிகளும், 15
நாட்களுக்குள் கல்விக்கடன் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம்
அறிவுறுத்தியது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் கூறுகையில்,
"திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கி கிளைகள் சார்பில், கல்விக்கடன்
வழங்க, இதுவரை 132 மாணவ, மாணவியருக்கு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், நடப்பு கல்வியாண்டில் 4,500 முதல் 5,000 மாணவ,
மாணவியருக்கு 60 கோடி ரூபாய் வரை கல்விக்கடன் வழங்க
உத்தேசிக்கப்பட்டுள்ளது," என்றார்.
ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவ, மாணவியர் சம்பந்தப்பட்ட
வங்கிகளில் கல்விச்சான்றுகளை சமர்ப்பித்து, கடனுதவி பெறலாம். அவ்வங்கிகள்,
15 நாட்களுக்குள் கல்விக்கடன் வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment