கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி ரோட்டில் சாமியப்பா கூட்டுறவு
மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி
வகுப்பு துவங்கப்பட்டு, தற்போது நடந்து வருகிறது.
இதுகுறித்து நிலைய முதல்வர் அன்பு கூறியதாவது: "தஞ்சை
சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், தற்போது குரூப் 4 பயிற்சி
வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி வகுப்புகளை அனுபவம் மிக்க
ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். வாரம்தோறும் மாதிரி தேர்வுகளும்
நடத்தப்படுகிறது.
வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும்,
மூன்று மணி நேரமும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் பயிற்சி
வகுப்பு நடக்கிறது. பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்த தேர்வாளர்கள்,
உடனடியாக சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகி, வகுப்புகளில்
பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment