என்.எல்.சி., பெண்கள் பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட, 164 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர் , நெய்வேலி, என்.எல்.சி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6ம்
வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 300 மாணவியர் மதிய உணவு
சாப்பிடுகின்றனர். நேற்று மதியம், மதிய உணவுடன், முட்டை சாப்பிட்ட, 164
மாணவியருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவியர், என்.எல்.சி., பொது மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவியர்களுக்கு,
சிகிச்சையளித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியரை, கலெக்டர்
கிர்லோஷ்குமார் பார்வையிட்டு, சிகிச்சை குறித்து, கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment