சென்னை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்,
பிளஸ் 1 மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி
உள்ளன.
பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி
சதவீதம் சரிந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
மட்டுமல்லாமல், மாவட்ட கல்வி அதிகாரிகளையும், கல்வித்துறை, கேள்வி மேல்
கேள்வி கேட்டு, குடைந்து எடுக்கிறது.
இதனால், சரியாக படிக்காத பிளஸ் 1 மாணவ, மாணவியரை, பிளஸ் 2 வகுப்பிற்கு
அனுமதித்தால், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என, ஆசிரியர்கள்
அஞ்சுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மிக குறைந்த மதிப்பெண்களை
எடுத்த பிளஸ் 1 மாணவர்களை, தோல்வி அடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன்
கூறுகையில், "அதிகாரிகள், அழுத்தம் தருகின்றனர் என்பதற்காக, மாணவர்களை,
தோல்வி அடையச் செய்வது, சரியல்ல. வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை, அதிக
மாணவர்கள், வடிகட்டப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களுக்கு, பெரும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது" என்றார்.
கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "வழக்கம்போல், சரியாக படிக்காத,
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் தான், தோல்வி அடைந்துள்ளனர். அதிக
மாணவர்கள், தோல்வி அடையவில்லை" என, தெரிவித்தன.
No comments:
Post a Comment