தமிழகத்தில் புறையோடிய பள்ளி கல்வி சுற்றுலாவால், மாணவர்களின் மனநிலை
பாதிப்பதாகவும், மீண்டும் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும், எனவும்
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளி,
23,522ம், அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளி, 5,071ம், அரசு நடுநிலைபள்ளி,
7,651ம், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, 1,068ம் உள்ளது. அரசு உயர்
நிலைப்பள்ளி, 2,844ம், அரசு உதவி பெறும் உயர் நிலைப்பள்ளி, 543ம், அரசு
மேல்நிலைப்பள்ளி, 2,488ம், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, 8,266ம்
செயல்படுகிறது.
சில ஆண்டுக்கு முன், ஏட்டுக்கல்வியோடு மாணவ, மாணவியரின் படிப்பு
முடியக்கூடாது என்பதற்காக, கல்விச்சுற்றுலாவும், நட்புறவு, கலைத்திறன்
ஆகியவற்றை வளர்க்க, ஆண்டு இறுதியில், ஆண்டு விழா, விளையாட்டு விழா
நடத்தப்பட்டது.
ஆனால், மாணவர்களின் ஊக்கத்தை பெருக்கக்கூடிய, ஆண்டு விழாவும், கல்வி
சுற்றுலாவும், தற்போது இல்லாததால், மாணவர்கள் மனம் வெதும்பி உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கண்ணன்
கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில்
மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகமாக உள்ளது. 2012ல், ஆரம்பப்பள்ளி,
நடுநிலைப்பள்ளிகளில், 28 லட்சம் மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர்.
நடப்பு கல்வி ஆண்டில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
சேர்ந்துள்ளதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதற்கு, கல்வித்துறையில்
அரசு எடுத்த நடவடிக்கையே ஆகும்.
பொதுவாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரை சுற்றுலா அழைத்து
செல்வதும், ஆண்டு விழாவின்போது, பொதுத்தேர்வை காரணம் கூறி, அம்மாணவர்களை
புறக்கணிப்பதும் வழக்கம்.
கல்வி சுற்றுலாவால், ஏட்டுக்கல்வியோடு முடியாமல், நேரிடையாகவே, அவர்கள்
படித்த இடங்களை பார்ப்பதால், மாணவர்கள் மனதில் பாடங்கள் பதிகிறது. ஆண்டு
இறுதியில், ஆண்டு விழாவில் நடனம், பேச்சு, பாட்டு என மாணவர்களின்
கலைத்திறன் வெளிப்படும்.
சில ஆண்டாக, தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில், சுற்றுலாவும்,
ஆண்டுவிழாவும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, ஆண்டுவிழா நடத்தவும், சுற்றுலா
அழைத்து செல்லவும், அரசு பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்,
என்றார்.
இதுகுறித்து தலைமை ஆசியர் ஒருவர் கூறியதாவது: சுற்றுலா அழைத்து சென்ற
காலத்தில், சி.இ.ஓ., அனுமதி கையொப்பத்துடன் சென்று வந்தோம். மாணவ, மாணவியரை
அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்படும் என்ற பயத்தில், சுற்றுலா முடிந்து
வரும்போது, அனுமதி கடிதம் வழங்குவதாக, பெரும்பாலான சி.இ.ஒ.,க்கள்
தெரிவித்ததால், சுற்றுலாவை, மாணவர்களும், ஆசிரியர்களும் மறந்தனர், என்றார்.
No comments:
Post a Comment