"தஞ்சை சுற்றுவட்டார பார்வையற்றோர் மாணவ, மாணவியர் ப்ளஸ் 1
படிக்க சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க,
தஞ்சையிலுள்ள பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம்
உயர்த்த வேண்டும்" என, கலெக்டரிடம் பார்வையற்ற மாணவர், பெற்றோர் மனு
கொடுத்தனர்.
தஞ்சையில், கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்கூட்டம்
கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. இதில், மேம்பாலம் அரசு
பார்வையற்றோருக்கான உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் விமல், நாகராஜ்,
மணிகண்டன் மற்றும் பெற்றோர் ராஜம்மாள், நடராஜன், மாதம்மாள் ஆகியோர்,
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க
மாவட்ட செயல் தலைவர் ராம் தலைமையில், கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: "தஞ்சையில், மேம்பாலத்திலுள்ள
அரசு பார்வையற்றோர் உயர்நிலைப்பள்ளியில் 135 மாணவ, மாணவியர்
படிக்கின்றனர். தஞ்சை சுற்றுவட்டாரத்திலுள்ள திருவாரூர், அரியலூர்,
நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பார்வையற்றோருக்கான பள்ளிகள் இல்லை.
இதனால், இப்பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவியர் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை படி
த்து விட்டு, ப்ளஸ் 1 படிக்க 300 கி.மீ., தூரம் கடந்து, சென்னைக்குச் செல்ல
வேண்டியுள்ளது.
கூலி வேலை செய்யும் ஏழை பெற்றோர், அவ்வளவு தூரம் குழந்தைகளை
அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால்,
மேல்நிலைக்கல்வி முற்றிலும் தடைபடுகிறது. அதனால், தஞ்சை மேம்பாலம் அரசு
பார்வையற்றோருக்கான உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த
வேண்டும் என, கோரி வருகிறோம்.
இதுகுறித்து, பள்ளியில் மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு,
இடவசதி குறித்து தொடர்ந்து மூன்றாண்டு ஆய்வு நடத்தி,
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்துக்கு பலமுறை கல்வித்துறை
அதிகாரிகள், திட்ட குழுவினர் அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனாலும், இதுவரை
பள்ளியை தரமுயர்த்தி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் நலனை கவனத்தில்
கொண்டு, மேம்பாலம் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம்
உயர்த்த உரிய பரிந்துரை செய்து, தக்க நடவடிக்கையை கலெக்டர் எடுக்க
வேண்டும்." இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
இம்மனுவை பெற்ற கலெக்டர், "கோரிக்கை மனுவில் கூறியபடி,
பார்வையற்ற மாணவ, மாணவியர் நலன் கருதி, தஞ்சை மேம்பாலம் அரசு பார்வையற்றோர்
உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரமுயர்த்த உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், உரிய உத்தரவு வரும்" என்றார்.
No comments:
Post a Comment