"இரண்டாம் கட்ட பொறியியல் சேர்க்கைக் கலந்தாய்வு, வரும், 28ம் தேதி
நடக்கும்" என, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும்
மாணவர்கள், வரும், 27ம் தேதி வரை, அண்ணா பல்கலையில், நேரடியாக
விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஜூன், 21ம் தேதி முதல்
நடந்துவரும் முதல்கட்டக் கலந்தாய்வு, ஜூலை 26ம் தேதியுடன் (நாளை)
முடிகிறது. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு, 28ம் தேதி
நடக்கும். பிளஸ் 2 உடனடித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பி.இ.,
படிப்பில் சேர்வதற்கு வசதியாக, இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும், 27ம் தேதி வரை, அண்ணா
பல்கலையில், நேரடியாக விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு
மாணவர்கள், 250 ரூபாயும், இதர பிரிவு மாணவர்கள், 500 ரூபாயும் செலுத்தி,
விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, அங்கேயே அளிக்கலாம்.
வரும், 28ம் தேதி, கலந்தாய்வு நடக்கும். கலந்தாய்விற்கு வரும்போது,
அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். நிரம்பாமல் உள்ள
எஸ்.சி., அருந்ததியர் இடங்களில், எஸ்.சி., பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்க,
29ம் தேதி கலந்தாய்வு நடக்கும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், ஏற்கனவே பெற்ற சேர்க்கை உத்தரவு
மற்றும் உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும். இவ்வாறு, அண்ணா பல்கலை
தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment