அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு, ஆகஸ்ட் 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில், 62 அரசு
கல்லூரிகளில், 5,000த்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கான, பணியிட மாறுதலை பொது கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள, 10
ஆண்டுக்கு முன் அரசு நடவடிக்கை எடுத்தது.
"நடப்பாண்டிற்கான பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, ஆகஸ்ட், 5ம் தேதி
முதல், 8ம் தேதி வரை நடத்தப்படும்" என கல்லூரி கல்வி இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கலந்தாய்விற்கு முன்பதாகவே, செல்வாக்கை பயன்படுத்தி, பல
பேராசிரியர் இடமாறுதல் பெற்று விட்டதாக, கல்லூரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டி
வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி
கூறியதாவது: ஆண்டுதோறும், கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதில்லை.
கலந்தாய்வு தேதி அறிவிப்பதற்கு முன்பே, கல்லூரிகளில் காலியாக உள்ள
பேராசிரியர் பணியிடங்களை, இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.
ஆனால், கலந்தாய்வு அன்று தான், காலி பணியிடங்கள் குறித்து
தெரிவிக்கின்றனர். மாநிலத்தின், தொலைதூர மாவட்டங்களில் இருந்து,
கலந்தாய்வில் பங்கேற்க சென்னை வருபவர்களுக்கும், எந்த கல்லூரிக்கு இடம்
மாறுதல் கேட்பது என்றே தெரிவதில்லை.
கல்லூரியில் உள்ள காலி பணியிட விவரம் தெரியாததே இதற்கு காரணம். மேலும்,
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலந்தாய்வு நடப்பதில்லை. எனவே,
நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். இவ்வாறு, தமிழ்மணி
கூறினார்.
No comments:
Post a Comment