நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கு, 50 இடங்களை அதிகரிக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி
வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் செயல்படும்
மருத்துவக் கல்லூரிகளில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மருத்துவக்
கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான, இடங்களின் எண்ணிக்கையை
அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதன்படி, ஒரே தடவையில், 50 இடங்களை
அதிகரித்து கொள்ள அனுமதியளிக்க, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு
செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்,
அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். இந்த முடிவை விரைவாக அமல்படுத்துவது பற்றி,
அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 50
இடங்கள் உள்ள கல்லூரிகளில், 100 இடங்களாக உயர்த்தப்படும். 100 இடங்கள்
கொண்ட கல்லூரிகளில், 150 இடங்களாக உயர்த்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக, அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவக்
கல்லூரிகள், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள், கல்லூரிகளை ஆய்வு செய்து, இதற்கான
அனுமதியை வழங்குவர்.
தற்போது நாடு முழுவதும், 362 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 45 ஆயிரம் இடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment