"தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு
சேர்க்கைக்கான கவுன்சலிங், நாளை (ஜூலை 8), நாமக்கல் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளயில் துவங்கி, வரும் 15ம் தேதி வரை நடக்க உள்ளது" என,
முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: "தொடக்க கல்வி
பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவனத்தில், விண்ணப்பித்தவர்களுக்கு, நாளை முதல், 15ம் தேதி வரை,
கவுன்சலிங் நடக்க உள்ளது. மாணவர் சேர்க்கை கவுன்சலிங், நாமக்கல் அரசு
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அழைப்புக் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், கவுன்சலிங் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள
நாளான்று சேர்க்கை கடிதத்தில் குறிக்கப்பட்ட அனைத்து அசல் சான்றுகளுடன்,
கவுன்சலிங் மையத்திற்கு, ஒரு மணி நேரம் முன்னதாக வரவேண்டும்.
குறிப்பிட்ட நாள், நேரத்திற்கு பின் வரும்
விண்ணப்பதாரர்கள், கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அழைப்புக் கடிதம் கிடைக்காத நபர்கள், www.tcscert.org என்ற இணையதள முகவரியில் அழைப்புக் கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment