"மாணவர்கள் புதிய தேடல்களில் ஈடுபடுவதால் தவறுகளை குறைக்க
முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் வாழும்
கலை குழும நிர்வாகிகள் பேசினர்.
கோவை வாழும் கலைக் குழுமம் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம்
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் என்.ஐ.ஏ., பள்ளிகளில் பயிலும்
மாணவர்களுக்கு வாழும் கலை பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை வாழும் கலைக்குழும
ஒருங்கிணைப்பாளர் கவுரி தலைமை வகித்தார். "எஸ்" (Youth Empowerment Skills
workshop) என்னும் தலைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் இப்பயிற்சி
நடக்கிறது.
கோவை வாழும் கலைக்குழும நிர்வாகிகள் பேசியதாவது: "வாழும்
கலைப்பயிற்சியானது உலகளாவிய அனைத்து பகுதிகளிலும் உள்ளது. இதில்,
மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் நினைவாற்றல் மற்றும்
மூச்சுப்பயிற்சி குறித்து விளக்கப்படுகிறது. 13-17 வயது வரை படிக்கும்
மாணவர்களுக்கு நினைவாற்றல் சற்று தடுமாறும். இதனை கட்டுப்படுத்தும் வகையில்
மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்கள், தங்களுக்குள் உள்ள தீய பழக்கங்களை விட்டுவிட்டு
நினைவாற்றல் பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். மாணவர்களிடையே புதிய
தேடல்கள் இருக்க வேண்டும். இதனால், மனதை பரப்பரப்பாக வைத்து கொள்ளலாம்.
தவறுகளையும் குறைக்க முடியும்.
இத்துடன் மூச்சுப்பயிற்சி எடுத்துக்கொள்வதால் இதயம் மற்றும்
மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தவிர்க்க முடியும். உடல்
அளவிலும், மனதளவிலும் சரியாக இருந்தால் மாணவர்கள் தங்கள் பணிகளை சரியாக
செய்ய முடியும். இதனால், கற்று தரப்படும் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய
வேண்டும்." இவ்வாறு, அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment