பல்லுயிர்களையும், தட்பவெப்ப மாறுதல்களையும் மையமாக கொண்டு
வடிவமைக்கப்பட்டுள்ள, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 27ம் தேதி, சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது.
சுற்றுச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையின்
கூட்டு முயற்சியில், பல்லுயிர்களையும், தட்பவெப்ப மாறுதல்களையும் மையமாக
கொண்டு, அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில், ஏப்., 9ம் தேதி டில்லியில் துவங்கி வைக்கப்பட்டு, நாடு
முழுவதும், அக்., 28ம் தேதி வரை, 62 நகரங்களுக்கு சென்று வர ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர்களுக்கு அறிவியல் கண்காட்சி ரயிலில்
இடம்பெறும் தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும்.
காலை, 10:00 மணியில் இருந்து, மாலை, 5:00 மணி வரை கண்காட்சி
திறந்திருக்கும். இந்த ரயில், கடலூர் துறைமுகத்தில், வரும், 31ம் தேதியில்
இருந்து, ஆக., 3ம் தேதி வரையும்; திருச்சியில், ஆக., 4ம் தேதியில் இருந்து,
7ம் தேதி வரையும்; மதுரை கூடல் நகர் நிலையத்தில், ஆக., 8ம் தேதியில்
இருந்து, 11ம் தேதி வரையும்; கோவையில், ஆக., 20ம் தேதியில் இருந்து, 23ம்
தேதி வரையும் நிறுத்தி வைக்கப்படும்.
No comments:
Post a Comment