பி.இ., கலந்தாய்வு துவங்கியதில் இருந்து, இ.சி.இ., (எலெக்ட்ரானிக்ஸ்
அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பாடப் பிரிவு தான், முதலிடத்தில்
இருந்தது. தர வரிசையில் முதலிடங்களை பெற்ற மாணவர் உட்பட அனைவரும், இந்த
பாடப் பிரிவைத் தான் தேர்வு செய்தனர்.
ஆனால் தற்போது, இ.சி.இ.,
பாடப்பிரிவு, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக,
எம்.இ., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) பாடப் பிரிவை, 27,378 பேர், தேர்வு
செய்துள்ளனர். இ.சி.இ., பிரிவில், 22,259 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில், சிவில் இன்ஜினியரிங் பிரிவு உள்ளது. இதில், 15,431
மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.ஆட்டோ மொபைல், ஏரோநாட்டிகல், பயோ டெக்னாலஜி,
ஐ.டி., போன்ற துறைகளை, மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை.
சிவில் இன்ஜினியரிங், தமிழ் வழியில், 307 மாணவர்களும், எம்.இ., தமிழ் வழி பிரிவில், 245 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
No comments:
Post a Comment