நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கியது.என்.எல்.சி.,
நிறுவனத்தின் சார்பில் நெய்வேலி வட்டம் 10ல் உள்ள புத்தகக் கண்காட்சி
திடலில் 16ம் ஆண்டு கண்காட்சியை நேற்று மாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி
தனபாலன் தொடங்கி வைத்தார்.
என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் தலைமை தாங்கினார். என்.எல்.சி.,
மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா, சுரங்கத்துறை இயக்குனர்
ரவீந்திரநாத், மின்துறை இயக்குனர் ராஜகோபால், நிதித்துறை இயக்குனர்
ராகேஷ்குமார் என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை அதிகாரி ஷிவ்ராஜ்
சிங் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. செயல்
இயக்குனர் வீரபிரசாத், தலைமை அலுவலக மனித வளத்துறை முதன்மை பொது மேலாளர்
முத்து, நகர நிர்வாகத் துறை பொது மேலாளர் சக்ரவர்த்தி உள்ளிட்ட
உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment