தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக பி.எட்.
படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல்
5-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 இடங்களும், ஆங்கில வழியில் 500 இடங்களும் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 5-ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 26-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு மையங்களிலும், பி.எட். கல்வி மையங்களிலும் ரூ. 500 கட்டணம் செலுத்தி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 577 அண்ணா சாலை, சென்னை - 600015 என்ற முகவரிக்கு ரூ. 550-க்கான வரைவோலையை அனுப்பி அஞ்சல் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். இந்த படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 8 நகரங்களில் ஆகஸ்ட் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடத்தப்பட உள்ளது.
நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் முதல் தொடங்கும். வகுப்புகள் 2014 ஜனவரியில் தொடங்க உள்ளது.
மேலும் விவரங்களை அறிய 044 - 24306658, 24306657 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment