கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி, அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 55 பகுதி நேர
ஆசிரியர் பணியிடம் நிரப்பபடுகிறது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் சுகன்யா வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பகுதி நேர ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பகுதி நேர ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படுகிறது.
கலை ஆசிரியர் (ஓவியம்) 25 பணியிடங்களும், உடல் நலம் மற்றும்
உடற் கல்வி ஆசிரியர் 25 பணியிடம், தையல் ஆசிரியர் ஒரு பணியிடம்,
கம்ப்யூட்டர் ஆசிரியர் மூன்று பணியிடம் சேர்த்து, 55 காலிப்பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத
தொகுப்பூதியமாக, ஐந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பங்களை முதன்மை
கல்வி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து வரும், 27ம் தேதி மாலை 5.45
மணிக்குள் அளிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி தகுதி
சான்றிதழ்கள், ஜாதிச்சான்று, முன்னுரிமை சான்று (பெற்றிருப்பவர்கள்
மட்டும்), வேலை வாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல், முழு அஞ்சல்
பின்கோடுடன் முகவரியிட்ட தபால் கார்டு ஒன்று ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம் தேவைப்படுவோர் தங்களது அசல் கல்வித்தகுதி
சான்றிதழ்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அட்டையை காண்பித்து
விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அன்று கட்டாயம் அனைத்து அசல்
சான்றிதழ்களுடன் வரவேண்டும். நேர்காணல் தேதி அழைப்பு கடிதம் மூலமும்,
அலுவலக தகவல் பலகை மூலமும் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment