"கல்லூரி ஆசிரியர்களுக்கான, இட மாற்ற பொது கலந்தாய்வு தேதியை, உடனே
அறிவிக்க வேண்டும்" என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விடுத்துள்ளது.
சங்க தலைவர், தமிழ்மணி கூறியதாவது: கலை கல்லூரி ஆசிரியர்களுக்கான,
இடமாற்ற பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கும் முன்பே, முறையற்ற வகையில், பணி
இடமாற்றங்கள், கடந்த ஓராண்டாக நடந்து வருகின்றன. அரசு தலையிட்டு, உடனே
கலந்தாய்வு தேதியை அறிவித்து, வெளிப்படையாக ஆசிரியர் பணி இடமாற்றங்களை
நடத்த வேண்டும்.
கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திலும், மண்டல கல்வி இணை இயக்குனர்
அலுவலகத்திலும் லஞ்ச புகார்களில் கைது செய்யப்படும் பணியாளர்கள் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 4ம் தேதியும், சென்னையில் ஆர்ப்பாட்டம்
நடத்த உள்ளோம். இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.
No comments:
Post a Comment