"பிசியோதெரபிஸ்ட்களுக்கு துறை ரீதியான
அங்கீகாரம் வழங்கும் வரை, கல்லூரிகளில், இப்படிப்புக்கான மாணவர்
சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும்" என, தமிழக அரசுக்கு, இயன்முறை
மருத்துவர்கள் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இயன்முறை மருத்துவர்கள் பெருமன்ற மாநில பொதுக்குழு கூட்டம்,
மதுரையில், நேற்று முன்தினம் நடந்தது. அதில், "மாநில பிசியோதெரபி
கவுன்சில்" அமைப்பது தொடர்பாக, 2008 அக்., 16ம் தேதி, தமிழக அரசு, அரசாணை
வெளியிட்டது.
இயன்முறை மருத்துவர்களின் கருத்துக்களை கேட்டறியாமல்,
வெளியிடப்பட்ட இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும். பிசியோதெரபி மாணவர்கள்,
வல்லுனர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு, அதன்
அடிப்படையில், மாநில பிசியோதெரபி கவுன்சில் அமைப்பதற்கான புதிய அரசாணையை,
தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும்.
பிசியோதெரபி பட்டதாரிகளின் அரசு வேலைவாய்ப்பு மற்றும் துறை
ரீதியான அங்கீகாரம் ஆகியவற்றில், சுகாதார துறை கொள்கை முடிவு எடுக்கும்
வரை, பிசியோதெரபி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தடை செய்ய வேண்டும்
என்பது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment