"தமிழக சட்டசபையில் மே 10ம் தேதி நடைபெறவுள்ள கல்வித்துறை
மானியக் கோரிக்கையின் போது பணிநியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர்
ஜெயலலிதா வெளியிடுவார்,'' என நர்ஸரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள
ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் முழுவதும் திறந்த நிலை பல்கலையின்
மூலம் நர்ஸரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள, 20 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த பல ஆண்டாக பணி வாய்ப்பின்றி பரிதவித்து
வருகின்றனர்.
இவர்களில் சிலர் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த
சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர். தமிழகம் முழுவதும், 3,500
பள்ளிகளில் ஆங்கில இணைப் பிரிவு துவங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே
அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில், நர்ஸரி பள்ளி ஆசிரியர் பயிற்சி
முடித்துள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை
நிலுவையில் உள்ளது.
இதனடிப்படையில் தமிழக சட்டசபையில் மே, 10ம் தேதி
நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்
போது நர்ஸரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்களை பணிநியமனம்
செய்வது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடுவார் என
புதுக்கோட்டை மாவட்ட தொடக்கப்பள்ளி இளநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்
வசந்தமீனா, செயலாளர் நந்தகுமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்
நம்பிக்கையுடன் உள்ளனர்.
No comments:
Post a Comment