மாநகராட்சி தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும்
மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், இலவசமாகப் பேருந்து பயண அட்டை
வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ், தொழிற்பயிற்சி
நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, படிப்பைத் தொடர முடியாதோருக்கு,
வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், மூன்று மாதம் முதல், இரண்டு ஆண்டுகள்
வரையிலான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, பயிற்சிக்கான கட்டணம் முழுவதையும் சமீபத்தில்
மாநகராட்சி ரத்து செய்து, இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது. 250க்கும்
மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
இவர்களுக்குப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும்
வகையிலான அட்டையைத் தரும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது.
இதற்கு, 4.5 லட்சம் ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இதை மாநகராட்சியே ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசு
அனுமதி கிடைத்ததும், வரும் கல்வியாண்டு முதல், இலவச பேருந்துப் பயண அட்டைத்
திட்டம் செயல்படுத்தப்படும் என, தெரிகிறது.
No comments:
Post a Comment