வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
கணக்கை இனி ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளும் வசதி ஜூலை 1ம் தேதி முதல்
அமல்படுத்தப்படுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(இ.பி.எப்) ஆணையர்
அனில் சொரூப் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: பி.எப். சந்தாதாரர்களுக்கு
பல்வேறு புதிய வசதிகளை செய்து தர திட்டமிட்டுள்ளோம்.
ஒரு நிறுவனத்தில் இருந்து விலகி, வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேரும்போது
தங்கள் பி.எப் கணக்கை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.
இதை தடுக்க
புதிய நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி,
கணக்கை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பித்தால்போதும். அவர் ஏற்கனவே வேலை பார்த்த
நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களை பெற்று கணக்கு புதிய
நிறுவனத்துக்கு மாற்றப்படும்.
இதற்காக புதிய மத்திய அலுவலகம் தொடங்கப்படும்.
விண்ணப்பத்தின் நிலை என்ன
என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர தங்கள் கணக்கில் இருந்து
பணம் எடுப்பதற்கும் இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் உள்ள 5 கோடி சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண் வழங்கும் பணி இன்று 10 மாதத்தில் முடிவடையும். இவ்வாறு அனில் சொரூப் கூறினார்.
this is best chance for PF holders
ReplyDelete