"மாணவர்கள் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் பாடம் கற்றுத்தந்த
ஆசிரியர்களை மறக்க கூடாது," என, தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்
சொக்கலிங்கம் பேசினார்.
சிவகாசி பி.எஸ்.ஆர்.,இன்ஜினியரிங் கல்லூரியில் 14வது ஆண்டு
விழா நடந்தது. விழாவில் தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை தென்மண்டல
உறுப்பினர் சொக்கலிங்கம், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற
மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது:
மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி தாய்நாட்டிற்கும்
சமுதாயத்திற்கும் பயன்படும் படி வாழ வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமே,
மாணவர்கள் தங்களை விட அதிகம் பணம் சம்பாதித்தாலும், சமுதாயத்தில் பெரிய
மனிதர்களாக வளர்ந்தாலும் அவர்களை கண்டு பொறாமைப் படாமல், மேலும் வளர
வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.
மாணவர்கள் தாங்கள் வாழ்வில் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும்,
பாடம் கற்றுத் தந்த ஆசிரியர்களை மறக்கக் கூடாது. மாணவர்கள் கல்வியுடன்
சேர்ந்து ஒழுக்கம்,கலாச்சாரம்,பண்பாடு போன்றவற்றையும் கற்றுக் கொள்ள
வேண்டும் என, பேசினார்.
No comments:
Post a Comment