தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட
சந்தாதாரர்களுக்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் இந்த
வார இறுதியில் அனுமதி வழங்கும் என தெரிகிறது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர்களுக்கு, 2012-13ம் நிதியாண்டிற்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்குவது என, இ.பி.எப்.ஓ., என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட அமைப்பின், மத்திய அறக்கட்டளை முடிவு செய்தது. இந்த முடிவை அமல்படுத்த, தொழிலாளர் அமைச்சகம் தாமதப்படுத்தி வருகிறது என, ஏ.ஐ.டி.யு.சி., செயலர் சச்சதேவ் கூறினார்.
இ.பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை வாரியம், கடந்த பிப்ரவரி மாதம்,
25ம் தேதி கூடியபோது, இ.பி.எப்., சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள தொகைக்கு,
8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்தது.இந்த முடிவை, தொழிலாளர்
அமைச்சகம் அமல்படுத்துவதற்கு முன், நிதி அமைச்சகத்தின் அனுமதி பெற
வேண்டும். பொதுவாக, மத்திய அறக்கட்டளை வாரியம், வட்டி வீதத்தை, நிதி
ஆண்டின் துவக்கத்தில் அறிவித்து விடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, நிதி
ஆண்டின் இறுதியில் தான் அறிவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டிற்கு, நிதி ஆண்டு முடிந்தும் கூட அறிவிக்கப்படாமல் உள்ளது. கடந்த வாரம், ராமநவமியையொட்டி, விடுமுறையாக இருந்ததால், மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்கவில்லை. இந்த வார இறுதியில், அறிவிக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment