"முடியும் என்ற சிந்தனையால், தோல்வியை தோற்கடிக்க முடியும்," என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் சுடலை முத்து கூறினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடந்த ஒன்பதாவது பட்டமளிப்பு
விழாவில், அவர் பேசியதாவது: அதிக அறிவை பெறுவதற்கும், உயர் கல்வி
பெறுவதற்கும், இப்பட்டம் திறவு கோல் ஆகும். கல்வி உங்களை முழு மனிதனாக
ஆக்குகிறது. தடைகளை தாண்டி செயல்கள் ஆற்றுவதற்கு இது நல்ல தருணம்.
வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என நம்புங்கள். முடியும் என்ற
வார்த்தைதான் ஒவ்வொரு மனிதனையும் புது பொழிவு பெற வைக்கிறது.
ஆபிரகாம் லிங்கன் ஆரம்பத்தில் எடுத்த அத்தனை முயற்சிகளும்
தோல்வி அடைந்தன. அவரது முடியும் என்ற சிந்தனையால், தோல்வியை தோற்கடித்தார்.
வெற்றியாளர்களின் குறிக்கோள் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை இருந்தால்
தரணி ஆளலாம்.
நம்மிடம் நேர்மறையான எண்ணங்கள் இருத்தல் வேண்டும். இந்த
எண்ணம் எதிர்மறையான கதவுகளை திறக்கும். தேவைப்பட்டால் உடைக்க வேண்டும்.
மாணவர்கள் திறனையும், ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். எதையும்
புத்துணர்வோடு செய்ய வேண்டும். புதுவிதமான சிந்தனைகள் எழ வேண்டும்.
வெற்றிக்கு கடுமையாக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள், என்றார்.
முதல்வர் கண்மணி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர்
செல்வராஜன் வரவேற்றார். இளங்கலை, முதுகலை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 702
பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 18 பேர் பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றனர்.
துணை முதல்வர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment