"தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ,
மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் பயிற்சி முகாம் வரும் 25ம்
தேதி துவங்குகிறது. இதில், ஆர்வமுடையோர் பங்கேற்கலாம்" என, மாவட்ட ஆட்சியர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
தஞ்சை ஆட்சியர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு கோடை கால பயிற்சி முகாம் தஞ்சை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கிறது. பயிற்சி முகாம் வரும் 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் தினமும் காலை 6:30 மணிக்கு 8:30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் 21 நாட்களுக்கு நடக்கிறது.

இதில், தடகளம், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி
மற்றும் பளு தூக்குதல் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி தரப்படும். இம்முகாம்,
பயிற்றுனர் மற்றும் உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படும்.
இதில், தஞ்சை மாவட்டத்திலுள்ள 16 வயதுக்கு உள்பட பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடத்தப்படும்.
பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், உடற்
திறனாய்வு தேர்வு திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியரும்
பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு தரப்படும். இதில், பங்கேற்கும் அனைவருக்கும்
பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
No comments:
Post a Comment