பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச்
சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின்
கீழ், 1,294 விடுதிகள் இயங்குகின்றன. இவற்றில், பிற்பட்டோர்,
மிகப்பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்,
எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தங்கி படிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது, 80,064 மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். மாணவர்களுக்கு,
மாதம் தோறும் உணவு மற்றும் பலவகை செலவின கட்டணங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு, 2013-14ம் ஆண்டு, 178 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டு உள்ளது.
இலங்கை தமிழர்களின் குழந்தைகளும், இந்த விடுதிகளில் தங்கி படிக்க,
ஒவ்வொரு விடுதியிலும், 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, பிற்பட்டோர்,
மிகப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில்,
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment