ஏப்ரல் மாதத்துக்கு முழுமையான ஊதியம் வழங்கக் கோரி முதன்மைக் கல்வி அலுவலகத்தை சிறப்பாசிரியர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் .
அரசுப் பள்ளிகளில் கணினி, தையல், ஓவியம், தோட்ட வேலை, இசை உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த ஆசிரியர்கள் மாதத்தில் 12 நாள்கள் வேலைப் பார்த்தாலே முழுமையான ஊதியம் வழங்க வேண்டும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் 19-ம் தேதியுடன் பள்ளி வேலைநாட்கள் முடிவுறும் நிலையில் இந்த மாதம் வாரத்தில் 3 நாள்கள் பணி என 19-ம் தேதி வரை 3 வாரங்களுக்கு 9 நாள்கள் மட்டும் பணியாற்றியுள்ளதாக கணக்கில் கொண்டு பணியாற்றிய நாள்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் திங்கள்கிழமை மாலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திரண்டனர். பிறகு அதிகாரிகளிடம் இந்த கோரிக்கை குறித்து மனு அளித்தனர்.
அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களாக 637 பேர் பணியாற்றுவதாகவும், ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் வேலைப் பார்த்து வரும் தங்களுக்கு, இந்த மாதம் பணி நாள்களை கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் போல் இந்த மாதமும் முழுமையான ஊதியம் வழங்க வேண்டும்.

No comments:
Post a Comment