தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின்
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களச் சேர்க்க வரும் மே 5
முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.இ. கலந்தாய்வை முன்கூட்டியே நடத்த வசதியாக வரும் மே 4 முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது. அதேபோன்று எம்.பி.பி.எஸ். படிப்பிலும் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்ப விநியோகம், கலந்தாய்வு ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க மருத்துவக் கல்வியை நிர்வகிக்கும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. பி.இ. கலந்தாய்வு ஜூன் 21இல் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக ஜூன் 15 அல்லது ஜூன் 17ஆம் தேதி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
25,000 விண்ணப்பங்கள்: பிளஸ் 2 பாடத் திட்டத்தில் இயற்பியல்- வேதியியல்- உயிரியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ். படிப்பில் சேர அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது? பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி வெளியானது. எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்-கலந்தாய்வு, பி.இ. விண்ணப்ப விநியோகம்-கலந்தாய்வு ஆகியவை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதால், பிளஸ் 2 தேர்வு முடிவு மே 10ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம்போல் எம்.பி.பி.எஸ்.-பி.டிஎஸ். (பல் மருத்துவம்) ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. கடந்த ஆண்டு முதல்கட்டமாக 25 ஆயிரம் விண்ணப்பங்களும் பின்னர் கூடுதலாக 5,000 விண்ணப்பங்களும் அச்சடிக்கப்பட்டன. அதே எண்ணிக்கையில் இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment