"மாவட்டத்தில், 31 பகுதி நேர ஆசிரியர் காலிப் 
பணியிடங்களுக்கு, தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பம் 
வரவேற்கப்படுகிறது" என, சி.இ.ஓ., குமார், கூடுதல் சி.இ.ஓ., கோபிதாஸ் 
ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் கல்வி 
இயக்கத்தின் கீழ், நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், 
31 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதி வாய்ந்த நாடுனர்கள், ஏப்ரல், 27ம் 
தேதி மாலை, 5 மணிக்குள், விண்ணப்பத்தை, முதன்மை கல்வி அலுவலகத்தில் 
சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதற்கான மாதிரி படிவம், முதன்மை கல்வி அலுவலகம், கூடுதல் 
முதன்மை கல்வி அலுவலகம் (அனைவருக்கும் கல்வி இயக்கம்), மாவட்ட கல்வி 
அலுவலகத்தில் உள்ள விளம்பர பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
உடற்கல்வி ஆசிரியர் ஒன்பது, கலை ஆசிரியர் (ஓவியம்) 13, 
கம்ப்யூட்டர் பயிற்றுனர் இரண்டு, தையல் ஆசிரியர் ஐந்து, இசை ஆசிரியர் 
இரண்டு என மொத்தம், 31 காலிப்பணியிடம் உள்ளது. இவ்வாறு அதில் 
கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூர்: பகுதி நேர ஆசிரியர் 
பணியிடங்களுக்கு, ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, இன்று முதல் திருவள்ளூர்
 மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 
பஞ்சாயத்து மற்றும் அரசு பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை 
பயிலும் மாணவ, மாணவியருக்கு, 52 உடற்கல்வி மற்றும் உடல்நலக் கல்வி 
ஆசிரியர்கள், 24 ஓவிய ஆசிரியர்கள், இரண்டு தையல் ஆசிரியர்கள், ஏழு இசை 
ஆசிரியர்கள், ஒன்பது கணினி ஆசிரியர்கள், ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர 
ஆசிரியர்களாக, தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் 
வரவேற்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள 
உடற்கல்வி மற்றும் உடல்நலக் கல்வி ஆசிரியர்கள், ஓவியம், இசை, தையல் மற்றும்
 கணினி ஆசிரியர்கள் பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள், திருவள்ளூர், 
ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும்
 கல்வி இயக்க மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில், இன்று (22ம் 
தேதி) முதல் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி 
தேதி, வரும், 27ம் தேதி. மேற்கண்ட பதவிகளுக்கு தொகுப்பூதியமாக, மாதம் 5,000
 ரூபாய் வழங்கப்படும். இத்தகவல், ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள 
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
  
No comments:
Post a Comment