"கிராம நூலகத் திருவிழா" நடத்தி, பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரித்து, நூலகங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழமையான புத்தகங்கள், இதழ்கள்,
நாவல்களை சேகரிக்கும் வழக்கம், சிலரிடம் உள்ளது. இப்புத்தகங்கள் வீட்டிலேயே
முடங்கி விடாமல், பாதுகாக்கும் வகையில், "கிராம நூலகத் திருவிழா"க்களை
நடத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது.
சேகரிக்கும் புத்தகங்களை நூலகங்களில் வைக்கவும், பள்ளிக் கல்வித்துறை
சம்பந்தமான அனைத்து செய்தியை கொண்டு, "கற்க கசடற" என்னும் பருவ இதழ்
வெளியிடவும் நூலகங்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான மாதிரி படைப்புகளை, கையெழுத்து பிரதியாக வெளியிட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment