பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே புத்தகம்
வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதாகவும், அதற்கு நூலகத் துறை மூலம்
வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்
தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் மாணவ,
மாணவியருக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கலையரங்கத்தில் நடந்த
இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது:
பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கும்
குறைந்து கொண்டே வருகிறது.
அதனால் நூலகத் துறையின் சார்பில் வாசகர்
வட்டத்தை உருவாக்கி மாணவ, மாணவியர் மத்தியிலும், பிறரிடத்திலும் வாசிக்கும்
பழக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு, இங்கு
வந்துள்ள நீங்கள் நாள்தோறும் 50 பக்கங்களாவது படிப்போம் என உறுதியேற்றுக்
கொள்வது அவசியம். ஏனென்றால், வருங்காலம் போட்டிகள் நிறைந்த உலகமாக
இருக்கும். அதனால், மாணவர்களாகிய நீங்கள் சீரிய சிந்தனையோடு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து, 586 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் ஜி. ராஜ்குமார் தலைமை வகித்தார்.
முதல்வர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். அருப்புக்கோட்டை
கோட்டாட்சியர் குணசேகரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி துணை முதல்வர் ரவிபிரபு நன்றி கூறினார்.
No comments:
Post a Comment