ஆங்கில வழி கல்வி துவக்கத்தை அறிவிக்கும் பொருட்டு, திருப்புவனம் அருகே, அரசு பள்ளியில், கனிவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் வழிக் கல்வியில் சேர்ப்பதை
விட, ஆங்கில வழியில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம்,
கிராமத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கிராமத்து அரசு பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை குறைந்து, ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.
சேர்க்கை குறைவை தடுக்கவும், வரும் கல்வி ஆண்டு முதல், ஆங்கில
வழிக்கல்வி துவக்கத்தை உணர்த்தும் வகையிலும், சிவகங்கை திருப்புவனம் புதூர்
அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், "மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க; கல்வி தொடர்பான அனைத்தும் இலவசம்" என, விளம்பரப்படுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment