"தொடர்ந்து படிக்கும்போது தான், புதிய சிந்தனை உருவாகும்," என காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுடலைமுத்து பேசினார்.
கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில், பத்தாவது பட்டமளிப்பு
விழா நடந்தது. விழாவுக்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் ஜாஸ்மீன்
வரவேற்றார். செயலாளர் பிரேமா மரியகொரட்டி முன்னிலை வகித்தார். விழாவில்
இளநிலை, முதுகலை படித்த, 482 மாணவிகளுக்கு, காரைக்குடி அழகப்பா பல்கலை
துணைவேந்தர் சுடலைமுத்து பட்டங்களை வழங்கி பேசியதாவது:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறியது போல்,
மாணவிகள் கனவு காண வேண்டும். அந்த கனவு வாழ்வில் முன்னேற தூண்டுதலாக
இருக்கவேண்டும். வெற்றி பெற மாணவிகள் கனவு காண வேண்டும். மாணவிகள் தங்களின்
செயல்பாடுகளையும், திறமைகளையும் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும்.
கல்வி என்பது பட்டம் பெறுவதோடு மட்டும் முடிந்துவிடவில்லை.
தொடர்ந்து பயில வேண்டும். அப்போது தான் புதிய புதிய சிந்தனைகள், தேடல்கள்,
கருத்துகள் பிறந்து கொண்டே இருக்கும்.மாணவிகள் தெளிவான நோக்கத்தை
திட்டமிட்டு வகுத்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு,
படிப்பில் கவனத்தை செலுத்தினால், அதுவே வெற்றிக்கான வழியாக அமையும்.
படித்து முடித்த பின் இந்த சமுதாயத்திற்காக நாம் என்ன செய்தோம்? என சிந்தித்து செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment