அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், உட்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த, அரசு அறிவுறுத்தியுள்ளது. பழைய பள்ளி கட்டடங்களின்,
உறுதி தன்மையை ஆராயும் பணி விரைவில் துவங்கப்படுகிறது.தமிழகத்தில்,
நகர்புறங்களை விட கிராமங்களில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகளவில்
உள்ளது.
மிட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், நகராட்சி நிர்வாகத்தாலும், கிராமங்களில் உள்ள பள்ளிகள், ஒன்றியங்களாலும் மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, பழைய கட்டடத்தில் செயல்படும், பள்ளிகளின் உறுதித் தன்மை குறித்து, பொறியாளர்கள் மூலம் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
வலுவான நிலையில் உள்ள பள்ளி கட்டங்களை புதுப்பிக்கவும், மோசமான நிலையில் உள்ள பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்டவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளை, ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இதர திட்டங்களில், கழிப்பிடம், குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.மே மாத இறுதிக்குள், பள்ளி கட்டடத்தின் நிலையை பொறுத்து, புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "கிராமப்புற பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, கழிப்பிட வசதிகள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சில கிராமங்களில் மட்டும், பழைய கட்டடத்தில் பள்ளிகள் செயல்படுகின்றன. இக்கட்டடங்கள் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை புதுப்பிக்க, கல்வித்துறை அதிகாரிகளிடமும் உதவி கேட்கப்பட்டுள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment